மலேசிய போலிசுக்கு விடுமுறை ரத்து

மலேசிய போலிசுக்கு விடுமுறை ரத்து

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பொதுத்தேர்தல் நெருங்கி விட்டதால் மார்ச் முதல் மே மாதம் வரையில் காவல்துறையின் வெளி நாட்டுப் பயணங்களுக்கான விடு முறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவைப் பிறப்பித்த போலிஸ் படை நிர்வாகப் பிரிவின் இயக்குநரான ஆணையர் அப்துல் கஃபார், இம்மாதம் 21ஆம் தேதி புதிய உத்தரவு அமலுக்கு வரு கிறது என்றார். பொதுத்தேர்தலுக்கு போலி சாரை ஆயத்தப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் சொன்னார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட் டதும் உள்ளூர் பயணங்கள் உட் பட அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படும். இருப்பினும் குறிப்பாக போலிஸ் தலைமையக இயக்குநர்களின் வேலை தொடர் பான வெளிநாட்டுப் பயணங்கள் அனுமதிக்கப்படும் என்றார் அவர். "பொதுத் தேர்தலுக்குத் தேவை யான மனிதவளத்தை வழங்க ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.