மியன்மாரில் வெடிகுண்டுத் தாக்குதல்

மியன்மாரில் வெடிகுண்டுத் தாக்குதல்

1 mins read

யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 5.30 மணியளவில் அரசு உயர் அதிகாரி ஒருவரின் வீடு உட்பட மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. மூன்று குண்டுகள் வெடித்ததோடு மேலும் மூன்று குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்று மியன்மார் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்களில் உயிர் சேதம் ஒன்றும் இல்லை என்றாலும் போலிஸ் அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.