சவூதி அரேபியாவில் 'ஜேஸ்' இசைத் திருவிழா

சவூதி அரேபியாவில் 'ஜேஸ்' இசைத் திருவிழா

1 mins read
be2e6eb2-0415-441d-b89a-f97617a36e99
-

ரியாத்: சவூதி அரேபியாவில் ஏற் பட்டுவரும் மாற்றங்களில் ஒன் றாக இம்முறை அந்நாட்டில் முதல்முறையாக 'ஜேஸ்' இசைத் திருவிழா நடைபெற்றது. பழமைவாத கொள்கைகள் கொண்ட நாடு எனும் அதன் போக்கை மாற்றிக்கொள்ள பல முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்துவருகிறது. ரியாத், பெய்ரூட், நியூ ஓர்லீயன்ஸ் ஆகிய இடங்களிலி ருந்து மூன்று நாள் திறந்த வெளி மைதானத்தில் இசைக் கச் சேரியை நடத்தவந்துள்ள இசைக் குழுவினரைப் பார்த்து இசையை ரசிக்க மக்கள் திரண்டு வந்து உள்ளனர். இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் எண்ணெய் சாரா பொருளியலை மேம்படுத்தவும் சவூதி அரசு மும்மு ரமாக முயற்சிகள் எடுத்துவருகி றது. அதன் ஒரு பகுதியாக கேளிக்கைத் துறையையும் மேம் படுத்துகிறது. ஆக, அதன் முந் தைய கொள்கைகளைத் தளர்த்தி திட்டங்களை வகுத்துவருகிறது. இந்த ஆண்டு 5,000க்கும் மேற்பட்ட திருவிழாக்களையும் இசைக் கச்சேரிகளையும் நடத்த பொது கேளிக்கை ஆணையம் முடிவு செய்துள்ளது.

முந்தைய கொள்கைகளை மாற்றி புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் சவூதி அரேபியாவில் நடைபெற்ற இசைத் திருவிழாவில் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்