சோமாலியா: 45 பேர் மரணம்; பலர் காயம்

சோமாலியா: 45 பேர் மரணம்; பலர் காயம்

1 mins read
bcc3c048-6576-4819-854a-7530844a57d3
-

மோகாடி‌ஷு: சோமாலியா தலை நகர் மோகாடி‌ஷுவில் நேற்று முன் தினம் நடந்த இரண்டு வெடி குண்டு தாக்குதல்களில் 45 பேர் உயிரிழந்ததாகவும் 36க்கும் மேற் பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இரண்டு வெடிகுண்டுகளும் கார்களில் வைக்கப்பட்டு வெடிக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ஒன்று அதிபர் மாளிகை யின் வெளியில் நடந்ததாகவும் மற்றொரு வெடிகுண்டு தேசிய உளவுத்துறை அமைப்பின் அலுவ லகங்கள் அமைந்துள்ள பகுதியில் பிரபல ஹோட்டல் அருகில் வெடித்துள்ளதாகவும் பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தாக்குதல் நடத்திய ஐவரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய போராளி அமைப்பான 'அல்ஷபாப்' பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் மன்றம் ஆதரவளிக்கும் சோமாலிய அரசாங்கத்தை எதிர்த்து வந்து உள்ளது. அதிபர் மாளிகைக்கு வெளியே உள்ள சோதனைச் சாவடியில் போராளிகள் வந்த வாகனம் நிறுத்த மறுத்ததையடுத்து பாது காப்புப் படையினர் நடத்திய துப் பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து தாக் குதல் தொடங்கியதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்துவந்த சோமாலியாவில் சுமார் ஒரு மாதமாக நிலவி வந்த அமைதி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இரண்டு கார் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்; 36 பேர் காயமடைந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்