காபூல்: ஆப்கானிஸ்தானில் தனித் தனியே நடந்த இரண்டு தாக்குதல் சம்பவங்களில் 19 பேர் மாண்டனர்; எட்டு பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் காபூலில் தூதரக வட்டாரம் அருகே தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு வர் உயிரிழந்தார். பாதுகாப்புக்கான தேசிய நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடந்துள்ளது. ஆறு பேர் காயம டைந்த அந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற் கவில்லை. இதற்கிடையில், ஆப்கானிஸ் தான் ராணுவ முகாம் வெளியில் உள்ள சோதனைச் சாவடியை தலி பான் போராளிகள் தாக்கியதில் 18 ராணுவ வீரர்கள் மாண்டனர்.
வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க ஆதரவுப் படையினர் அதிகளவில் நடத்திவரும் வேளை யில் அதை எதிர்கொள்ளும் தலி பான் அமைப்பு வெடிகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்து வருகி றது. ஆப்கானிஸ்தானில் வலிய தாக்குதல் நடத்தக்கோரி புதிய திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித் ததிலிருந்து அங்கு தாக்குதல்கள் அதிகமாக நடந்து வந்துள்ளன. தலிபான் போராளிகள் பலர் ஒன்றுசேர்ந்து ராணுவ சோதனைச் சாவடியைத் தாக்கியதாக தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் தவ்லத் வஸிரி கூறியுள்ளார். தாக்குதல்களுக்குப் பொறுப் பேற்றுள்ள தலிபான் அமைப்பு அதன் போராளிகளில் இருவர் தாக்குதல்களில் மாண்டதாகவும் கூறியுள்ளது. காபூலில் தொடர்ந்து நடந்துவரும் தாக்குதல்களில் இதுவே ஆக அண்மையில் நடந்த ஒன்று. இதுவரை நூற்றுக்கணக்கா னோர் உயிரிழந்ததோடு பலர் காய மடைந்துள்ளனர்

