அதிபருக்கான இரு தவணைக் கால வரம்பை நீக்க சீனா பரிந்துரை

அதிபருக்கான இரு தவணைக் கால வரம்பை நீக்க சீனா பரிந்துரை

1 mins read
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவில் அதிபர் ஒருவர் இரண்டு தவணைக் காலத்திற்கு மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்ற வரம்பை நீக்குவதற்கான யோசனையை அந்நாட்டு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ளது. செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங் கால வரம்பின்றி அதாவது 2023ஆம் ஆண்டுக்குப் பிறகும் அதிபராக நீடிக்க இந்த யோசனை வழி வகுக் கிறது. தற்போது 64 வயதாகும் ஸி ஜின்பிங், நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு தவணைக் காலம் முடிவடைந்த பிறகு அதிபர் பதவி யிலிருந்து விலக வேண்டும்.

திரு ஸி ஜின்பிங்கின் முதலாவது தவணைக்காலம் முடிவுறவுள்ள நிலை யில் வரும் மார்ச் 5 ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற ஆண்டுக் கூட்டத்தின் போது இரண்டாவது தவணைக்காலத் திற்கு அதிபராக நீடிக்க அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். திரு ஜின்பிங் 2013ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் அதிபராக இருந்து வருகிறார். தற்போதைய அரசியல மைப்புச் சட்டப்படி 2023 ஆம் ஆண்டு அவர் பதவி விலகுவார். பத்து ஆண்டு கள் மட்டுமே அவர் அதிபர் பதவியில் நீடிக்க முடியும் என்ற போதிலும் கட்சித் தலைவர் பொறுப்பு மற்றும் ராணுவத் தலைவர் பொறுப்பில் அவர் நீடிப்பதற்கு வரம்பு கிடையாது.