சோல்: தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா நேற்று நடந்தது. நிறைவு விழாவில் கலந்துகொள்ள வடகொரியாவிலிருந்து உயர் மட்டக் குழுவினர் நேற்று தென்கொரியா வந்து சேர்ந்தனர். வடகொரியாவின் ஆளும் கட்சியின் மத்திய குழு துணைத் தலைவர் கிம் யோங் சோல் தலைமையில் வடகொரியக் குழுவினர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய தலைவர் கிம் யோங் சோலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்கொரியாவில் ஆர்ப்பாட்டங் கள் நடந்தன. 2010ஆம் ஆண்டு தென் கொரிய போர்க்கப்பல் மீது நீர்மூழ்கிக் குண்டு பயன்படுத்தப் பட்டு கடலோடிகள் 46 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தவர் கிம் யோங் சோல் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை வடகொரியா மறுத்து வருகிறது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் கலந்துகொள்ள வடகொரியாவின் ஆளும் கட்சி மத்திய குழு துணைத் தலைவர் கிம் யோங் சோல் (வலது) தலைமையில் தென்கொரியா வந்துள்ள வடகொரிய குழுவினர். படம்: ராய்ட்டர்ஸ்

