டமாஸ்கஸ்: குவைத்திலுள்ள ஒரு வீட்டில் குளிர்சாதனப் பெட்டிக்குள் பிலிப்பீன்சைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜோன்னா டிமாஃபிலிஸ் என்ற 29 வயது பணிப்பெண்ணைக் காணவில்லை என்று புகார் செய்யப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் அவரது உடல், குளிர்சாதனப்பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை போலிசார் சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்தனர். இந்நிலையில் அந்த பணிப்பெண் கொலை தொடர்பில் அவரின் முதலாளிகளான நடெர் இசாம் அசாஃப்பையும் அவரின் மனைவியையும் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் போலிசார் கைது செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பணிப்பெண் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து குவைத்திற்கு வேலைக்குச் செல்ல பிலிப்பீன்ஸ் ஊழியர்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
குவைத்தில் பணிப்பெண் மரணம்; முதலாளிகள் சிரியாவில் கைது
1 mins read

