கப்பல்களை வழிமறித்து சோதனை செய்ய திட்டம்

கப்பல்களை வழிமறித்து சோதனை செய்ய திட்டம்

1 mins read

வா‌ஷிங்டன்: வடகொரியா மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தடையை மீறும் கப்பல்களை வழிமறித்து சோதனை செய்வதை தீவிரப்படுத்துவது தொடர்பில் சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆசிய-பசிபிக் கடல் பகுதியில் செல்லும் கப்பல்களை வழிமறித்து சோதனை செய்ய அமெரிக்க கடலோர காவல் படை வீரர்களை அமர்த்துவது உட்பட பல்வேறு யோசனைகள் அடங்கிய திட்டம் குறித்து அமெரிக்கா அதன் வட்டார பங்காளி நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.

வடகொரியா அதன் அணு வாயுதத் திட்டத்திற்கு உதவும் வகையில் கடல்வழி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் அதனை முடக்கும் முயற்சியாக கப்பல்களில் சோதனை மேற்கொள்வதை தீவிரப் படுத்துவது குறித்து அந்த நாடுகள் ஆராய்ந்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறிய தாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரி விக்கிறது. இதற்கு முன்பு சந்தேகத்திற்குரிய கப்பல்கள் வழிமறித்து சோதனை செய்யப் பட்டு வந்தன. இந்த சோதனை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது புதிய திட்டமாகும்.