கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகள் 110 பேரை தேடும் பணி தீவிரம்

கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகள் 110 பேரை தேடும் பணி தீவிரம்

1 mins read

அபுஜா: நைஜீரியாவில் சென்ற வாரம் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் 110 பேரை தேடும் பணியை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. கூடுதல் ராணுவ வீரர்கள் மாணவிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். தேடும் பணிக்கு உதவ விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்குள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நுழைந்த போராளிகள் அங்கிருந்த மாணவிகள் 110 பேரை கடத்திச் சென்றனர். போக்கோ ஹராம் போராளிகள் அந்த மாணவிகளை கடத்திச் சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

2014ஆம் ஆண்டு நைஜீரியாவில் சுமார் 200 மாணவிகள் போக்கோ ஹராம் போராளிகளால் கடத்தப்பட்ட சம்பவத்தை தற்போதைய கடத்தல் சம்பவம் நினைவுபடுத்துகிறது. கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள், அரசாங்கத்தின் மீது சினம் அடைந்துள்ளனர். முக்கியமான சோதனைச் சாவடிகளிலிருந்து ராணுவ வீரர்களை அரசாங்கம் மீட்டுக்கொண்டதை பலர் குறை கூறினர்.