துப்பாக்கிக்கான தடையை அமெரிக்க தேசிய துப்பாக்கி சங்கம் ஆதரிக்கவில்லை

துப்பாக்கிக்கான தடையை அமெரிக்க தேசிய துப்பாக்கி சங்கம் ஆதரிக்கவில்லை

1 mins read

வா‌ஷிங்டன்: ஃபுளோரிடா மாநிலத் தில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் ஒருவன் கண்மூடித்தன மாக சுட்டதில் 17 பேர் உயிரிழந் ததைத் தொடர்ந்து துப்பாக்கிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் துப்பாக்கிக்கான தடையை ஆதரிக்கவில்லை என்று அமெரிக்க தேசிய துப்பாக்கி சங்கம் தெரி வித்துள்ளது. துப்பாக்கி கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் யோசனை கூறியுள்ள வேளையில் அந்த யோசனைக்கு மாறான கருத்தினை சங்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி டக்லஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து கடுமையான துப்பாக்கி சட்டங் களைக் கொண்டுவர அந்த சங்கம் தவறியதாக பலர் குறை கூறி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டு சம்ப வங்களை தடுக்க ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப் பது நல்லது என்று திரு டிரம்ப் யோசனை கூறியிருந்தார்.