பிரிட்டனின் லெஸ்டர் நகரில் உள்ள ஒரு கடைத் தொகுதியில் ஏற்பட்ட வெடிப்பில் நால்வர் உயிரிழந்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர். அந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. வெடிப்பில் காயமடைந்த மேலும் நால்வர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமாக உள்ளது என்றும் மருத்துவமனைத் தகவல்கள் கூறின. அந்த வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்புடையதா என்பதை இப்போது கூற இயலாது என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்
பிரிட்டனின் லெஸ்டர் நகரில் வெடிப்பு: நான்கு பேர் மரணம்
1 mins read
-

