பெய்ருட்: சிரியாவில் போராளிகள் வசம் உள்ள கெளட்டா பகுதியில் அரசாங்கப் படை குளோரின் வாயுவைப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டதற்கான அறிகுறிகள் தெரிவதாக அப்பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கெளட்டா பகுதியில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பைத் தொடர்ந்து குளோரின் வாடையை அப்பகுதி யில் இருந்த மக்களும் ஆம் புலன்ஸ் ஓட்டுநர்களும் உணர்ந்த தாக அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். அந்தத் தாக்குதலில் காயம் அடைந்த குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு மருத்துவமனை களில் ஆக்ஸிஜன் செலுத்தப் படுவதாக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஒருவர், மூன்று வயது குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாகக் கூறியுள்ளார்.
சிரியாவில் அரசாங்கப் படை மேற்கொண்ட தாக்குதலில் காயமுற்ற ஒரு குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூச்சு விடுவதற்கு சிரமப்படும் இக்குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

