பிரிட்டனில் 3.7 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு

1 mins read

லண்டன்: பிரிட்டனில் தற்போது 3.7 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவர அறிக்கை கூறுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 17 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 1998ஆம் ஆண்டிலிருந்து 1.9 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று அந்த புள்ளிவிவர அறிக்கை கூறுகிறது. இதற்கு முன்பு வயதானவர்கள் மட்டுமே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர். தற்போது சிறுவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.