தென்கொரிய முன்னாள் அதிபர் மீதான வழக்கு

தென்கொரிய முன்னாள் அதிபர் மீதான வழக்கு

1 mins read

சோல்: சென்ற ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டு விசாரணையை எதிர்கொள்ளும் தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹைக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் நேற்று சோல் நகரில் நீதிமன்றத்திற்கு வெளியில் கூடியிருந்த பார்க் கியூனின் ஆதரவாளர்கள் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவாட்டி பார்க்கின் நெருங்கிய தோழி சோய் சூன் சில்லுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.