வாஷிங்டன்: துப்பாக்கிக்கான தடையை ஆதரிக்கவில்லை என்று அமெரிக்க தேசிய துப்பாக்கி சங்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த சங்கம் அவ்வாறு கூறியது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்க ஆளுநர்களிடம் கூறியுள்ளார். வெள்ளை மாளிகை சந்திப் பின்போது அங்கு வந்திருந்த 35 ஆளுநர்களிடம் திரு டிரம்ப் இவ்வாறு கூறினார். "அமெரிக்க தேசிய துப்பாக்கி சங்கம் நம் பக்கமே. அப்படி அவர்கள் நம் பக்கம் இல்லையென்றால் ஒரு நேரத்தில் ஒவ்வொரு முறையும் நாம் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். அவர்கள் எது சரி என்று நினைக்கிறார்களோ அதனையே அவர்கள் செய் கிறார்கள்," என்றும் திரு டிரம்ப் கூறினார்.
ஃபுளோரிடாவில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஒருவன் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க விரும்புவதாக திரு டிரம்ப் கூறினார். அத்துடன் துப்பாக்கி வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21ஆக உயர்த்த விரும்புவதாகவும் திரு டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் திரு டிரம்ப், பள்ளி பாதுகாப்பு திட்டங்கள் குறித்து அமெரிக்க ஆளுநர்களுடன் பேச்சு நடத்தியபோது இந்த யோசனையைக் கூறத் தவறி விட்டார் என்று தெரிகிறது.

