சிரியா தாக்குதலை நிறுத்த ரஷ்யா உதவ முடியும்

சிரியா தாக்குதலை நிறுத்த ரஷ்யா உதவ முடியும்

1 mins read
1780a39a-7d25-498e-946d-dbc3d5cb3066
-

வா‌ஷிங்டன்: சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதியில் அரசாங்கப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் வேளையில் ரஷ்யா அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. போராளிகளின் வசம் உள்ள கெளட்டா பகுதி, தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ளது. இப்பகுதியில் சுமார் 393,000 பேர் வசிக்கின்றனர். போராளிகளை வீழ்த்தி அப் பகுதியைக் கைப்பற்ற அரசாங்கப் படை கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவுடன் சிரியா படை அப்பகுதியில் தொடர்ந்து குண்டு களை வீசித் தாக்கி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் கடந்த 8 நாட்களில் மட்டும் 560 பேருக் கும் அதிகமானோர் கொல்லப் பட்டதாக கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரியா படை மேற்கொண்ட தாக்கு தலில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பலர் காயமுற்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. சிரியா அதிபர் ஆசாத்தின் படைகள் மூன்று நாட்களுக்கு முன்பு சொந்த நாட்டு மக்கள் மீதே குளோரின் வாயுவைப் பயன் படுத்தியிருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

அகதிகள் முகாமில் தங்கியுள்ள சிரியா மக்கள், ஐநா அமைப்பு வழங்கிய நிவாரண உதவிப்பொருட்களை பெட்டிகளில் கொண்டு செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி