குஷ்னரின் வெளிநாட்டு தொடர்பு குறித்து கவலை

குஷ்னரின் வெளிநாட்டு தொடர்பு குறித்து கவலை

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மருமகனும் அவரின் மூத்த ஆலோசகருமான ஜெரட் குஷ்னரின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து கவலை எழுந்துள்ளதாக அமெரிக்க அதி காரிகள் தெரிவித்துள்ளனர். திரு குஷ்னரின் சிக்கலான வணிக ஏற்பாடுகளில் நன்மை அடையும் வகையில் அவரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்து குறைந்தது நான்கு நாடுகளில் உள்ள அதிகாரிகள் கலந்து ஆலோசித்ததாக இந்த விவகாரம் தொடர்பிலான உளவுத் தகவலை நன்கு அறிந்த தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொந்த ஆதாயத்திற்காக குஷ்னரை பயன்படுத்திக் கொள் ளும் வழிகள் குறித்து கலந்துரை யாடிய நாடுகளில் ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகள், சீனா, இஸ்ரேல், மெக்சிகோ ஆகிய நாடுகளும் உள்ளடங்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குஷ்னர் வெளிநாட்டு அதிகாரி களுடன் தொடர்பு வைத்திருந்த தாகவும் தேசிய பாதுகாப்பு மன்றம் மூலமாக அவர் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று தனக்கு தெரியவந்ததாக திரு டிரம்ப்பின் தேசிய ஆலோச கரான எச்.ஆர். மெக்மாஸ்டர் கூறினார். வெளிநாட்டு அதிகாரி களுடனான குஷ்னரின் தொடர்பு பற்றிய விவகாரம் திரு மெக்மாஸ் டரின் அன்றாட உளவுத்தகவல் குறித்த விளக்கக் கூட்டத்தில் எழுப்பப்பட்டது. வெள்ளை மாளிகையில் திரு குஷ்னரின் அரசாங்க அனுபவக் குறைவு மற்றும் அவரது வர்த்தக கடன் காரணமாக வெளிநாடுகள் அவரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.