ரசாயன ஆயுதங்கள் தயாரிக்க சிரியாவுக்கு வடகொரியா உதவி

ரசாயன ஆயுதங்கள் தயாரிக்க சிரியாவுக்கு வடகொரியா உதவி

1 mins read
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்குப் பயன் படுத்தக்கூடிய உபகரணங்களை அந்நாட்டுக்கு வடகொரியா அனுப்பி வந்துள்ளது என்று ஐநா நிபுணர்கள் கண்டறிந்துள்ளதாக அமெரிக்க ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. அமில எதிர்ப்பு பளிங்குக் கற்கள், குழாய்கள் போன்றவை அந்த உபகரணங் களுள் அடங்கும் என்று இன்னும் வெளியிடப்படாத ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. வடகொரியா அதன் ஏவு கணைத் தயாரிப்பு வல்லுநர்களை சிரியாவில் உள்ள ஆயுத உற்பத்தி மையங்களுக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள் ளது. சிரியாவில் அரசாங்கப் படை, மக்கள் மீது குளோரின் வாயுவை பயன்படுத்தி வருவதாக வெளிவந்த புதிய தகவலைத் தொடர்ந்து இந்தக் குற்றச் சாட்டுகள் வெளிவந்துள்ளன.

2016ஆம் ஆண்டுக்கும் 2017 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சீன வர்த்தக நிறுவனம் மூலமாக வடகொரியா ஐந்து கப்பல்களில் உபகரணங்கள் அனுப்பியதாக வால் ஸ்திரீட் ஜர்னல் கூறுகிறது.