மாஸ்கோ: ரஷ்யா, கண்களுக்குப் புலப் படாத புதிய வகை ஏவுகணையை உரு வாக்கியுள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். 4வது அதிபர் தவணைக்கால கொள்கைகளை விளக்கிய திரு புட்டின், இந்தப்புதிய கண்டுபிடிப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டார். உலகின் எந்த மூலைக்கும் பாய்ச்சக் கூடிய ஏவுகணை யும் அவற்றில் அடங்கும். காணொளிப் பட விளக்கங் களுடன் அமெரிக்காவின் பாதுகாப்பு கவசத்தால் தடுக்க முடியாத ஏவு கணை, இரண்டு அணுவாயுதங்கள், கண்களுக்குப் புலப்படாத ஏவுகணை, நீருக்கடியில் செயல்படும் ஆளில்லா வாகனம் போன்றவற்றை புட்டின் பட்டியலிட்டார்.
'கண்களுக்குப் புலப்படாத ஏவுகணை'
1 mins read

