டிரம்ப்பின் உதவியாளர் பதவி விலகல்

டிரம்ப்பின் உதவியாளர் பதவி விலகல்

1 mins read
1c60b7e9-d656-4391-b97e-8d15b9834981
-

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபரின் நம்பிக்கையான முக்கிய உதவியாளர் ஹோப் ஹிக்ஸ், வெள்ளை மாளி கையின் தொடர்பு இயக்குநர் பொறுப்பி லிருந்து விலகியிருக்கிறார். புதன்கிழமை வெளியான இந்தப் பதவி விலகல் அறிவிப்பால் அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவு ஏற் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அதிபர் டிரம்ப்பை சுற்றி யிருந்த பலர் பல்வேறு காரணங்களுக் காக வெள்ளை மாளிகை பணியிலிருந்து விலகி வருகின்றனர். இந்தப் பட்டியலில் தற்போது ஹோப் ஹிக்சும் இடம் பெற்றுள்ளார். திரு டிரம்ப்பின் மற்றொரு நெருக்க மான உதவியாளரான வெள்ளை மாளி கையின் ஊழியர் செயலாளர் ராப் போர்ட்டர் என்பவரைச் சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய விவகாரத்தில் ஹிக்சும் சிக்கியுள்ளார். திரு போர்ட்டர் தனது முன்னாள் இரு மனைவிகளை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அவருக்கு ஆதரவாக ஹோப் ஹிக்ஸ் குரல் கொடுத்திருந்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தபோது ஹோப் ஹிக்சுடன்(இடம்) உரையாடும் அதிபர் டிரம்ப். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்