மும்பை: இந்தியாவின் பிரபல கைத்தொலைபேசி நிறுவனங்களில் ஒன்றான 'ஏர்செல்' அண்மையில் சேவைகளை நிறுத்தியது. அதோடு திவாலான நிறுவனமாக அறி விக்கக் கோரி அது மனுத் தாக்கல் செய்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தில் 74 விழுக்காடு பங்குகளை வைத் துள்ள மேக்சிஸ் கம்யூனிகேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் சொந்தக் காரரான அனந்த கிருஷ்ணனுக்கு ஏழு பில்லியன் டாலர் இழப்பு ஏற் படலாம் என்று 'த ஸ்டார் ஆன் லைன்' வெளியிட்ட செய்தி குறிப் பிட்டது.
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஏர்செல் நிறுவனம் வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மலைபோல் குவிந் துள்ளது. இதனை அடைக்க முடியாமல் திணறிய அந்நிறுவனம் சேவைகளை நிறுத்தியது. கடந்த ஆண்டின் இறுதியில் ஏர்செல் நிறுவனத்துக்கும் இந்தி யாவின் ரிலையன்ஸ் கம்யூனி கேஷன் நிறுவனத்துக்கும் இடையி லான உடன்பாடு பலதரப்பட்ட விதிமுறை, நிச்சயமற்ற நடவடிக் கைகளால் மீட்டுக்கொள்ளப்பட் டது. இதையடுத்து ஏர்செல் நிறு வனத்தின் கடைசி வாய்ப்பும் கை நழுவியது.
மலேசியாவின் மேக்சிஸ் தொலைத் தொடர்பு நிறுவனத் தின் உரிமையாளரான அனந்த கிருஷ்ணன். கோப்புப் படம்

