தானில் தலிபான் பயங்கரவாதி களுடன் ஜெர்மனி நாட்டவர் ஒருவர் கைதாகியுள்ளார். "நீண்ட தாடியுடன் கறுப்பு தலைப்பாகை அணிந்த ஒருவர் தன்னை ஜெர்மனி நாட்டவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு ஜெர்மனி மொழியில் பேசினார். இவரையும் இவரோடு தலிபான் படையைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளோம்," என்று ஹெல்மாண்ட் மாநில ஆளு நரின் பேச்சாளர் ஒமர் ஸ்வாக் குறிப்பிட்டார். ஆப்கான் சிறப்புப் படைகள், ஆப்கான் விமானப் படையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக் கையில் இவர்கள் கைது செய் யப்பட்டதாக ஆப்கன் ராணுவம் வெளியிட்ட அறிக்கை தெரிவித் தது.
ஆப்கான் ராணுவம் வெளியிட்ட படத்தில் ஜெர்மனி நாட்டவர். படம்: ஏஎஃப்பி

