நஜிப் தொகுதியில் மகாதீர்

1 mins read
bc57629b-e4ee-4066-9ad9-26c96e48deea
-

பேகான்(பாஹாங்): மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சொந்த தொகுதியான பேகானுக்கு முன் னைய பிரதமர் மகாதீர் வருகை யளித்துள்ளதை அரசியல் விமர் சகர்கள் அணுக்கமாகக் கவனித் துள்ள வேளையில் அங்கு அவ ருக்கு ஆதரவாக நூற்றுக்கணக் கானவர்கள் திரண்டனர். பனை மரங்களால் சூழப்பட்ட ஒதுக்குப்புறமான 'ஃபெல்டா சினி 2' கிராமத்தில் உள்ள பிரதான சாலை பொதுவாக காலியாகக் காணப்படும். ஆனால் புதன்கிழமை அன்று டாக்டர் மகாதீரின் வருகையால் அந்த சாலை நிரம்பி வழிந்தது. செய்தியாளர்களும் கேமராக் களுடன் திரண்டுவிட்டனர். ஃபெல்டா குடியேறிகளில் ஒரு வரான அப்துல் ரஹிம், தாம் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன் என்றும் டாக்டர் மகாதீர் என்ன சொல்லப் போகிறார் என்பதை கேட்க விரும்பியதாகவும் கூறி னார்.

"நான் மகாதீரின் பேச்சை கேட்க வந்தேன். இங்குள்ள மக்கள் சிறந்த முடிவை எடுப் பார்கள் என்று நம்புகிறேன்," என்றார் அவர்.