வாஷிங்டன்: எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு வரி விதிக்கும் திட்டம் பற்றி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித் ததை அடுத்து அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடுகள் அவற்றின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் அந்த செய லுக்கு பதிலடியாக உரிய நட வடிக்கைகளை எடுக்கவிருப் பதாக கனடாவும் ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்துள்ளன. சீனா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் அந்த நடவடிக்கைக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளன.
திரு டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் நியாயமற்ற வர்த்தகம் மற்றும் மோசமான வர்த்தகக் கொள்கை யால் அமெரிக்கா பெரிதும் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறியுள்ளார். ஆகவே எஃகு இறக்குமதிக்கு 25 விழுக்காடு வரியும் அலுமினிய இறக்குமதிக்கு 10 விழுக்காடு வரியும் விதிக்க விருப்பதாக அவர் குறிப் பிட்டுள்ளார். இருப்பினும் இந்த வரி விதிப்பு அமெரிக்க வேலைகளைப் பாது காக்கத் தவறிவிடும் என்று அமெரிக்காவின் அத்திட்டத்தை குறை கூறுபவர்கள் தெரிவித்துள் ளனர். திரு டிரம்ப்பின் அந்த திடீர் அறிவிப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

