வாஷிங்டன்: அணுவாயுத ஆற்றல் மிக்க புதிய ஆயுதங்கள் ரஷ்யா விடம் இருப்பதாக ரஷ்ய அதிபர் புட்டின் அறிவித்துள்ள நிலையில் எந்த ஒரு மிரட்டலையும் சமாளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஹீத்தர் நவுர்ட் கூறியுள்ளார். அமெரிக்காவின் ஏவுகணை தற்காப்பு முறை ரஷ்யாவை நோக்கமாகக் கொண்டது அல்ல என்றும் ஈரான் மற்றும் வட கொரியாவின் மிரட்டலுக்கு எதிராக தற்காத்துக் கொள்வதற் கான முறை என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். உலகின் எந்த ஒரு இடத்தையும் சென்றடையக்கூடிய ஆற்றல் மிக்க ஏவுகணை ரஷ்யாவிடம் இருப்பதாகவும் அதனை பல தடவை ரஷ்யா வெற்றிகராக சோதனை செய்துள்ளது என்றும் திரு புட்டின் கடந்த வியாழக்கிழமை என்பிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறி னார்.
எந்த மிரட்டலையும் சமாளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது
1 mins read

