சிரியா: தரை வழியாக முன்னேறும் ராணுவம்

சிரியா: தரை வழியாக முன்னேறும் ராணுவம்

2 mins read

டமாஸ்கஸ்: நீண்டகாலமாக போராளிகள் வசம் இருந்த டமாஸ்கஸின் கிழக்கு கௌட்டா வில், சிரியா ராணுவம் தரை வழி யாக முன்னேறி வருவதாக சிரி யாவின் போர் நிலவரங்களைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் அமைப்பு கூறுகி றது. கிழக்கு கௌட்டா பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிரியா ராணுவம் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் நடத்திய கடுமை யான வான்வழித் தாக்குதல் களில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் அவர்களில், 120க்கும் மேற்பட்டவர்கள் சிறு வர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை முதல் இப்பகுதியில் சிரியா ராணுவம் தரை வழியாக முன்னேறி வருகின்றது.

மேலும், முக்கிய கிளர்ச்சிக் குழுவான ஜெய்ஷ் அல்=இஸ்லாம் அமைப்பிடமிருந்து இரண்டு ராணுவ தளங்களையும் அரசு ஆதரவுப் படைகள் கைப்பற்றின. கடந்த 2012ஆம் ஆண்டில் போராளிகள் வசமிருந்த கிழக்கு கௌட்டா பகுதியின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பே தற்போது அவர்கள் வசமிருப்பதாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் இத்தாலியின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமரு மான மட்டேயோ ரென்ஸி (வலக்கோடி) வாக்களித்தார்.

இவர் உட்பட சில்வியோ பெர்லுஸ் கோனி, மட்டேயோ சல்வானி, லுகி டி மயோ ஆகிய நால்வரும் அடுத்த பிரதமராகும் நோக்கில் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ள னர். ஆனால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறும் நிலையில், தேர்தல் முடிவுகள் சிங்கப்பூர் நேரப்படி இன்று இரவு தெரிய வரும். படம்: ஏஎஃப்பி