டிரம்ப்: ஐரோப்பிய ஒன்றிய கார்களுக்கு வரி விதிக்கப்படும்

டிரம்ப்: ஐரோப்பிய ஒன்றிய கார்களுக்கு வரி விதிக்கப்படும்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் இறக்குமதி வரிக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுக்க விருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில், அமெ ரிக்காவிற்கு இறக்குமதி செய்யப் படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்களுக்கு வரி விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அமெரிக்காவிற்குள் இறக்கு மதி செய்யப்படும் எஃகு (25%) மற்றும் அலுமினியத்திற்கு (10%) வரி விதிக்கும் திட்டம் இருப்பதா கக் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் அறிவித்தது முதல், உலகளவில் அதற்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்த இறக்குமதி வரியால் அதிகம் பாதிக்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது தொடர்பாக தாங்களும் பரிசீலனை செய்து வருவதாகக் கூறியுள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகை யில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், "ஒரு வேளை ஐரோப்பிய ஒன்றிய நாடு கள் வரியை உயர்த்தினாலோ, அங்குச் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதித் தாலோ, அங்கிருந்து அமெரிக்கா விற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கும் வரி விதிக்கப் படும்.

"அவர்களது கார்களை எளிதாக இங்கு விற்க முடிகிறது. ஆனால் எங்களது கார்களை அங்கு விற்க முடியாத அளவிற்கு செய்துவிட்டனர். இது சமநிலை யற்ற வர்த்தகம்.