இஸ்தான்புல்: துருக்கி தலைநகர் அங்காராவில் அமெரிக்க தூதரகம் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சுற்றுலா தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா ஆலோசனை கூறியுள்ளது. துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க உளவுத்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தூதரகத்திற்கு பொதுமக்கள் வருவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. தூதரகம் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
பாதுகாப்பு மிரட்டலால் துருக்கியில் அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டது
1 mins read

