மியன்மாரில் ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் ஆர்ப்பாட்டம்

1 mins read

யங்கூன்: மியன்மாரில் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க சட்டத்தை கடுமையாக்குவது குறித்து நாடாளுமன்ற உறுப் பினர்கள் விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் யங்கூனில் நேற்று பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்த தாக தகவல்கள் கூறின. சட்டத்தில் கொண்டுவரப் படவுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக் கணக்கான மக்கள் நேற்று யங்கூனில் ஊர்வலமாகச் சென்றனர். விவசாயிகள், ஊழியர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறப் பட்டது. தற்போதைய சட்டத் தில் மாற்றங்களைக் கொண்டு வர ஆங் சான் சூச்சியின் ஆளும் கட்சி ஆதரவு தெரி வித்துள்ளது. இருப்பினும் அக்கட்சியின் ஒரு எம்பி மட்டும் மாற்றத்திற்கு எதிராக தமது கருத்தைக் கூறியதாகத் தெரிகிறது. மியன்மாரில் மனித மீறல் சம்பவங்கள் நடப்பதாக உலக அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஆங் சான் சூச்சியின் அரசாங்கம் தவறி விட்டதாக மக்கள் கூறுகின்றனர்.