டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சி யாளர்களின் வசம் உள்ள கெளட்டா பகுதியில் தாக்குதல்கள் தொடரும் என்று சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத் தெரிவித் துள்ளார். ஆசாத்தின் அந்த அறி விப்பைத் தொடர்ந்து சிரியாவில் நீடிக்கும் சண்டைக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரி வித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் எனக்கூறி சிரியாவும் ரஷ்யாவும் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. கிழக்கு கெளட்டா பகுதியில் சிரியா அரசாங்கப் படை மூன்றாவது வாரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கி வரும் வேளையில் தரை வழித் தாக்குதலில் அரசாங்கப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இத்தாக்குதல்களில் குழந்தை கள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 600க்கும் அதிகமானோர் உயிரிழந் ததைத் தொடர்ந்து தாக்குதலை சிரியா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
அதிபர் ஆசாத்: சிரியாவில் தாக்குதல்கள் தொடரும்
1 mins read

