வியட்னாமில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்

1 mins read

ஹனோய்: வியட்னாம் போருக்குப் பிறகு முதன்முறையாக மிகப் பெரிய அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பல் ஒன்று நேற்று வியட்னாம் சென்று சேர்ந்தது. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. வியட்னாம் போரின்போது அமெரிக்கப் போர் படைகள் வந்தடைந்த டானாங் துறைமுக நகருக்கு அருகே அமெரிக்காவின் கார்ல் வின்சன் விமானந்தாங்கிக் கப்பல் நான்கு நாட்களுக்கு நங்கூரமிடப்பட்டிருக்கும். தென்சீனக் கடல் குறித்து சீனா தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பி வருவதால் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் செய்தியாக அமெரிக்காவின் விமானந் தாங்கிக் கப்பல் வியட்னாமிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சீனா அதன் வரவு செலவுத் திட்டத்தில் அதன் ராணுவச் செலவுக்கு 1.11 டிரில்லியன் யுவன் ஒதுக்கியிருப்பதாக அறிவித் திருக்கும் நேரத்தில் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் வியட்னாம் சென்றுள்ளது. அமெரிக்காவுக்கும் வியட்னா மிற்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்துள்ள போதிலும் அது இன்னமும் குறிப் பிட்ட வரம்புக்குள்ளேயே உள்ளது என்று வியட்னாமில் உள்ள பிபிசி நிருபர் ஒருவர் கூறினார்.

வியட்னாமின் டானாங் நகர துறைமுகத்திற்கு வந்துசேர்ந்த அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல். படம்: ராய்ட்டர்ஸ்