தாய்லாந்தில் குடியேறிய ஊழியர்களுக்கு பிரதமர் பிரயுத் ஆலோசனை

தாய்லாந்தில் குடியேறிய ஊழியர்களுக்கு பிரதமர் பிரயுத் ஆலோசனை

1 mins read

பேங்காக்: தாய்லாந்தில் குடியேறியுள்ள வெளி நாட்டு ஊழியர்கள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ளத் தவறினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத்-ஓ-சா அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தொழிலாளர் அமைச்சு விரைவாகச் செயல்படவில்லை என்று அவர் குறை கூறியுள்ளார். வெளிநாட்டு ஊழியர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உதவும் இயந்திரங்கள் போதிய அளவு இல்லாததால் ஊழியர்கள் பதிவு செய்துகொள்வதில் தாமதம் ஏற் பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் கள் பதிவு செய்துகொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் சுமார் 698,798 ஊழியர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.