ஆபத்தான நிலையில் முன்னாள் ரஷ்ய உளவாளி

ஆபத்தான நிலையில் முன்னாள் ரஷ்ய உளவாளி

1 mins read

லண்டன்: பிரிட்டனில் அடைக் கலம் கொடுக்கப்பட்டிருந்த முன்னாள் ரஷ்ய ராணுவ உளவு அதிகாரி ஒருவரும் ஒரு மாதும் இங்கிலாந்தின் சாலிஸ்பரி நகரில் ஒரு பேரங்காடியில் மயங்கி விழுந்த நிலையில் காணப் பட்டனர். முன்னாள் ரஷ்ய உளவாளி யான 66 வயது செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் 33 வயது மாது ஆகிய இருவரும் ஞாயிற்றுக் கிழமை மால்டிங்ஸ் பேரங்காடியில் உள்ள ஒரு நாற்காலியில் நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாக போலிசார் கூறினர்.

அந்தப் பெண், ஸ்கிரிபாலின் மகள் என்பது தெரியவந்துள்ளது. அவ்விருவரின் உடம்பில் வெளிக்காயங்கள் எதுவும் தென் படவில்லை என்றும் குற்றச்செயல் நடந்திருக்கலாம் என்ற கோணத் தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் போலிஸ் தகவல்கள் கூறின. அவர்கள் மீது என்னவென்று தெரியாத ஒரு பொருள் வீசப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத் தின் பேரில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இடைக்கால போலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். சாலிஸ்பரி வட்டார மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அவ்விருவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.