சோல்: தென்கொரியாவுடன் அணுக்க உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கூறியதாக வட கொரியாவின் அரசு ஊடகங் கள் தெரிவிக்கின்றன. வட கொரியா வந்துள்ள தென் கொரிய உயர் மட்டக் குழு வினரை பியோங்யாங்கில் சந்தித்துப் பேசிய திரு கிம், "தேசிய மறு இணைப்பு" எனும் புதிய வரலாற்றை எழுத விரும்புவதாகக் கூறி யிருக்கிறார். திங்கட்கிழமை இரவு தென்கொரிய அதிகாரி களுக்கு திரு கிம் விருந்த ளித்தார்.
அந்த விருந்தில் கிம்மின் மனைவி ரி சோல்-ஜூ மற்றும் கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங் ஆகியோரும் கலந்துகொண் டனர். திரு கிம் 2011ஆம் ஆண்டு வடகொரியத் தலை வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தென்கொரிய அதிகாரிகள் அவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். தென்கொரியாவில் சென்ற மாதம் நடந்த குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியக் குழுவினர் கலந்து கொண்டது முதல் இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் தணிந்து புதிய உறவு மலர்ந்துள்ளது.
வடகொரியா வந்துள்ள தென்கொரியக் குழுவினருக்கு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பியோங்யாங்கில் விருந்தளித்தார். அந்த விருந்தில் கிம்மின் மனைவி மற்றும் அவரது சகோதரியும் கலந்துகொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்