இலங்கையில் அவசரநிலை

இலங்கையில் அவசரநிலை

2 mins read
6185a8fd-faf4-4d70-9e5b-16863e92d877
-

இலங்கை அரசாங்கம், உள்நாட்டுப் போருக்குப் பிறகு முதல் முறையாக நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியிருக் கிறது. கண்டி மாவட்டத்தில் சிங்கள- முஸ்லிம் குழுக்களுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் வெடித்த தால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. "குடியிருப்பு வட்டாரங்களில் ராணுவ வீரர்களை அனுமதிக்கும் நடவடிக்கை பத்து நாட்களுக்கு நீட்டிக்க முடியும். இதனை நாடாளு மன்றம் அங்கீகரிக்க வேண்டும்," என்று இலங்கை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். "இலங்கை முழுவதும் இனக் கலவரம் பரவலாம் என்ற கவலை நிலவுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த திங்கட்கிழமையன்று கண்டி மாவட்டத்தில் சிங்கள-முஸ்லிம் இனக்குழுக் களுக்கு இடையே சண்டை மூண் டதாகக் கூறப்படுகிறது. பெரும்பான்மை சிங்கள பௌத்த சமயத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதற்கு அப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் குழு வினரே காரணம் என்று கூறப் பட்டதால் வன்முறை வெடித்தது. இதில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டன. இதையடுத்து வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்தன.

முஸ்லிம் வட்டாரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கடை கள், மூன்று பள்ளிவாசல்கள், சில வீடுகள் சேதமடைந்ததாகக் கூறப் படுகிறது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. ஆனால் அதையும் மீறி குடியிருப்பு வட்டாரங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி முஸ் லிம்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப் பட்டதைப் போல தோற்றமளிக் கிறது," என்றார். இதற்கு அரசாங்கம் கடுமை யான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எச்சரித்தார்.

குடியிருப்பு வட்டாரங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்