சிரியாவில் விமான விபத்து

சிரியாவில் விமான விபத்து

1 mins read

டமாஸ்கஸ்: ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று சிரியாவில் விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் 26 பேர் பயணிகள் என்றும் 6 பேர் விமான சிப்பந்திகள் என்றும் கூறப்பட்டது. சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ரஷ்ய விமானம் இறங்க முற்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று ரஷ்ய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள் ளார். விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று கூறி உள்ள ரஷ்யா, தொழில்நுட்பக் கோளாறுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறி உள்ளது.