கோலாலம்பூர்: மலேசியாவின் பக்கத்தான் ஹரப்பான் இன்று தேர்தல் அறிக்கையை வெளி யிடவுள்ளது. மலேசியத் தேர் தலுக்கு முன்னதாக வாக்காளர் களை ஈர்க்கும் நோக்கத்தில் துணிச்சலான சில திட்டங் களை எதிர்க்கட்சிகள் தேர்தல் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளன. எதிர்கால பிரதமர்கள் இரண்டு தவணைக் காலத் திற்கு மட்டுமே அப்பதவியில் நீடித்திருப்பதற்கான திட்டம் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள 6 விழுக்காடு பொருள் சேவை வரியை நீக்குவது, சாபா, சரவாக் மாநிலங்கள் கையெழுத் திட்ட 1963ஆம் ஆண்டு மலேசிய உடன்பாடு குறித்து ஆராய உடனடியாக ஒரு குழுவை அமைப்பது போன்ற திட்டங்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அக்கூட்டணியில் இடம் பெறும் நான்கு கட்சிகளும் சேர்ந்து 60 வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளன. ஐந்து ஆண்டு காலத்திற்குள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் பக்கத்தான் ஹரப்பான் உறுதி அளித்துள்ளது. தேர் தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத் தால் முதல் 100 நாட்களுக்குள் கொடுத்த வாக்குறுதிகளில் 10 நிறைவேற்றப்படும் என்றும் அக் கூட்டணி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "அரசாங்கம் அமைக்க நாங்கள் காத்திருக்கிறோம். ஆகையால் முக்கியமான எண்ணங்களை கொள்கை களாக உருவாக்கியிருக் கிறோம்," என்று கெஅடிலான் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸி சின் கூறியுள்ளார்.

