பாப்புவா நியூ கினியில் மீண்டும் நிலநடுக்கம்

1 mins read
740b93cd-b956-4eb1-b0aa-9ed6d1f8fa1a
-

சிட்னி: பாப்புவா நியூ கினியை நேற்று மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. மலைகளும் குன்றுகளும் நிறைந்த பகுதியில் நேற்று ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். ஒன்பது நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிப் பொருட்களை வாங்கிச் செல்வதற்காக காத் திருக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்