வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பொருளியல் ஆலோசகர் கேரி கோன் பதவியிலிருந்து விலகு வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. திரு டிரம்ப்பின் குழு விலிருந்து ஏற்கெனவே பல உயர் அதிகாரிகள் பதவி விலகி யுள்ளனர். அந்த வரிசையில் தற்போது கேரி கோனும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 57 வயதான கேரி கோன், திரு டிரம்ப் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து வெள்ளை மாளிகையின் பொரு ளியல் மன்ற இயக்குநராக வும் திரு டிரம்ப்பின் பொருளியல் ஆலோசகராகவும் பணி புரிந் தார். திரு கேரி கோன் சரியாக எந்தத் தேதியில் பதவி விலகுகிறார் என்பதை வெள்ளை மாளிகை இன்னும் தீர்மானிக்கவில்லை.
கேரி கோன் பதவி விலகு வதற்கு உண்மையான காரணம் என்ன என்பது வெளியிடப்பட வில்லை. வர்த்தகக் கொள்கை தொடர்பாக டிரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கேரி கோனின் இந்த முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தடையற்ற வர்த்தகத்தை ஆதரிப்பவர் திரு கோன். எஃகு மற்றும் அலுமினிய இறக்கு மதிக்கு வரி விதிக்கும் திரு டிரம்ப்பின் திட்டத்தால் சினம் அடைந்த கேரி கோன் பதவி விலக தீர்மானித்ததாக யூகங் கள் நிலவுகின்றன.

