கோமதி தாக்கப்பட்ட சம்பவம்: கணவர் உள்ளிட்ட இருவரை போலிஸ் தேடுகிறது

கோமதி தாக்கப்பட்ட சம்பவம்: கணவர் உள்ளிட்ட இருவரை போலிஸ் தேடுகிறது

1 mins read
5c72931d-0e64-4843-9ae8-4f3f25ad7339
-

பெட்டாலிங் ஜெயா: ஆடவர் ஒருவர் தமது மனைவியை அவ ரது வேலையிடத்தில் கடுமை யாகத் தாக்கும் காணொளி ஒன்று பரவியதைத் தொடர்ந்து அந்த ஆடவர் உள்ளிட்ட இரு வரை போலிசார் தேடி வரு கின்றனர். கோமதி ராமச்சந்திரன், 42, எனப்படும் அந்தப் பெண் தலை, இடது கை, கால்களில் ஏற்பட்ட காயங்களுக்காக சிரம்பான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நீல நிற கார் ஒன்றின் அரு கில் அந்தப் பெண்ணை ஒருவர் தரதரவென இழுத்துச் செல்வ தையும் கத்தி ஒன்றினால் மற் றோர் ஆடவர் தாக்குவதையும் காணொளியில் காணமுடிந்தது. பெண்ணின் அலறல் சத்தம் காணொளியில் ஒலித்தது. சம்ப வம் நிகழ்ந்த பகுதி கிள்ளான் என்று நம்பப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெண்ணின் கண வரையும் அவருடன் இருந்த ஆட வரையும் தாங்கள் தேடிவருவதாக தென் கிள்ளான் காவல் துறை துணை ஆணையாளர் ஷம்சுல் அமர் ராம்லி கூறினார்.