சாபா சாலையில் அன்ன நடை போட்ட குட்டியானை

சாபா சாலையில் அன்ன நடை போட்ட குட்டியானை

1 mins read
2c1cd2fd-35d2-41aa-9130-26ac76bffcbb
-

கோலாலம்பூர்: சாபாவில் ஜாலான் டெலுபிட்-டோங்காட் சாலையில் அன்ன நடைபோட்டு நடந்து சென்ற யானைக் குட்டியைக் கண்டு பலர் அதிர்ச்சி அடைந் தனர். அருகில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து தாயைப் பிரிந்த யானைக் குட்டி வழி தவறி சாலைக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது குறித்து பேசிய சாபா வனவிலங்கு துறையின் இயக்குநர் அகஸ்டின் டூகா, "இரண்டு மணி நேரம் காணாமல் போன குட்டி யானையை அதிகாரிகள் கண்டு பிடித்து மீட்டுள்ளனர்," என்றார். பின்னர் தாயிடம் குட்டி யானை வெற்றிகரமாக சேர்க்கப்பட்டது என்றும் அவர் சொன்னார். இந்த நிலையில் குறிக்கோள் இல்லாமல் அங்குமிங்கும் உலவிய குட்டி யானையின் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால் பலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.

தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று வழி தெரியாமல் சாபா சாலையில் நடந்து சென்றது பலரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

படம்: என்எஸ்டி இணையம்