வாஷிங்டன்: அமெரிக்காவின் எஃகு, அலுமினிய வரி விதிப்பி லிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் மெக்சிகோ, கனடாவுக்கும் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லும் ஆஸ்திரே லியாவுக்கு புதிய வரியிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து விவாதித்தனர். பின்னர் டர்ன்புல்லை குறிப் பிட்டு டுவிட்டரில் தகவல் வெளி யிட்ட அதிபர் டிரம்ப், நியாயமான வர்த்தக, ராணுவ உறவுக்கு டர்ன்புல் கடப்பாடு தெரிவித் துள்ளார் என்றார். கடந்த ஆண்டு அமெரிக் காவுக்கு ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்த எஃகு, அலு மினியத்தின் மதிப்பு 400 மில் லியன் ஆஸ்திரேலிய டாலர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.
அமெரிக்க வரி விதிப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விலக்கு
1 mins read

