மாஸ்கோ: ரஷ்யாவில் இம்மாதம் 18ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலிலும் ரஷ்யாவின் தற்போதைய அதிபர் புட்டின் வெற்றி பெறுவார் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். நேரடிப் பிரசாரத்தை புட்டின் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதை வேண்டுமென்றே அவர் தவிர்த்து வருகிறார். தலைநகர் மாஸ்கோவின் லுஷ்னிக்கி விளையாட்டரங்கத்தில் கூடிய பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு முன்பு அவர் வெறும் இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யத் தேர்தல் பிரசாரம்: புட்டின் இரண்டு நிமிட உரை
1 mins read

