இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷரீஃப், லாகூரில் உள்ள ஒரு மதராசாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நேற்று பேச முற்பட்டபோது அவர் மீது காலணி வீசப்பட்டது. வீசப்பட்ட காலணி நவாஸ் ஷரீஃப்பின் காதில் பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். காலணியை வீசிய நபர் நவாஸ் ஷரீஃப்பை நோக்கி விரைந்து அவருக்கு எதிராக முழக்கமிட்டார். அவரைக் கூட்டத்தில் இருந்தவர்கள் மடக்கிப் பிடித்தனர் அவர் கைது செய்யப்பட்டார்.
நவாஸ் ஷரீஃப் மீது காலணி வீச்சு
1 mins read

