பட்டாயா மதுபானக்கூடங்களில் தீ: சுற்றுப்பயணிகள் காயம்

பட்டாயா மதுபானக்கூடங்களில் தீ: சுற்றுப்பயணிகள் காயம்

1 mins read
59912ef3-add4-4b43-9783-552fbe676286
-

பட்டாயா: தாய்லாந்தின் பட்டாயா நகரில் உள்ள இரண்டு மதுபானக்கூடங்களில் நேற்றிரவு தீ மூண்டது. சம்பவம் நிகழ்ந்தபோது மதுபானக்கூடங்களில் கூட்டம் அதிகமாக இருந்ததாக தாய்லாந்து ஊடகம் தெரிவித்தது. மதுபானக்கூடங்களில் இருந்த இரண்டு சுற்றுப்பயணிகளுக்கு இலேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது. மின்மாற்று சாதனம் பழுதடைந்ததால் தீ மூண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மின்மாற்று சாதனம் வெடித்ததை அடுத்து, அருகில் இருந்த மதுபானக்கூடங்களுக்குத் தீ பரவியது. மதுபானக்கூடங்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 16 மோட்டார் சைக்கிள்கள் தீக்கு இரையாயின.