சீன அதிபரின் பதவிக் காலத்துக்கு வரம்பில்லை

சீன அதிபரின் பதவிக் காலத்துக்கு வரம்பில்லை

1 mins read
ceb8b44f-be15-4c11-9560-7124cf85ca83
-

பெய்ஜிங்: சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் பதவிக் காலத் துக்கு வரம்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபரின் பதவிக் காலத்துக்கு இருக்கும் வரம்பை ரத்து செய்வது குறித்து நேற்று அந்நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வாக்கெடுப்பு நடத்தியது. இந்த அரசியலமைப்பு மாற் றத்துக்கு ஆதரவாக 99.78 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. இதன் விளை வாக 64 வயது ஸீ ஜின்பிங் தாம் விரும்பும் வரை சீனா வின் அதிபராக இருக்கலாம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளராக ஸீ ஜின்பிங் இரண்டாவது முறை யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீனாவின் முதல் கம்யூனிஸ்ட் தலைவர் மாவ் ஸீதோங்குக்கு இருந்த அதிகப்படியான ஆதர வை ஸீ ஜின்பிங் பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. உள்நாட்டுப் போரில் வென்று சீனாவின் ஆட்சிப்பீடத்தை 1949ஆம் ஆண்டில் மாவ் ஸீதோங் பிடித்தார். அதன் பிறகு பிறந்த முதல் சீனத் தலைவர் எனும் பெருமை ஸீ ஜின்பிங்கைச் சேரும். அரசியல் களையெடுப்பில் தமது தந்தை சிக்கியதை அடுத்து, ஸீ ஜின்பிங்கின் குடும்பம் பல ஆண் டுகளுக்குச் சிரமப்பட நேர்ந்தது. ஆனாலும் அதையெல்லாம் கடந்து அவர் படிப்படியாக உயர்ந்தார். அதிபர் பதவிக்கு வந்ததும் ஊழலுக்கு எதிராக அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு மாற்றத்துக்கு வாக்களிக்கும் அதிபர் ஸீ ஜின்பிங். படம்: ஏஎஃப்பி