பங்ளாதேஷ் எதிர்க்கட்சித் தலைவர் பிணையில் விடுவிப்பு

1 mins read
6e0a88e6-ad8e-4ca9-9789-313f83eece2c
-

டாக்கா: பங்ளாதேஷ் எதிர்க் கட்சித் தலைவர் கலீடா சியா (படம்) பிணையில் விடுவிக் கப்பட இருக்கிறார். ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கான பணத்தைக் கையாடிய குற்றத்துக்காக பங்ளாதேஷ் தேசியவாத கட்சி யின் தலைவரான 72 வயது திருவாட்டி கலீடாவுக்கு கடந்த மாதம் ஐந்தாண்டு சிறை விதிக்கப்பட்டது. குற்றச்சாட்டை மறுத்த திரு வாட்டி சியா, தமக்கு எதிராக அரசியல் சூழ்ச்சி நடந்திருப்ப தாக தெரிவித்திருந்தார். தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்தார்.

கடந்த ஒரு மாதமாக அவர் தலைநகர் டாக்காவில் உள்ள சிறப்புச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். திருவாட்டி கலீடாவுக்கு நான்கு மாதப் பிணை வழங்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறினார். பங்ளாதே‌ஷின் அதிபராக இருந்த தமது கணவர் ஸியாஉர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பிறகு திருவாட்டி கலீடா அரசியலுக்கு வந்தார். பங்ளாதே‌ஷின் முன்னாள் பிரதமரான திருவாட்டி கலீடா மீது வன்முறை, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.