அமெரிக்க சுற்றுப்பயணிகள் கடத்தல்: சந்தேக நபர் கைது

அமெரிக்க சுற்றுப்பயணிகள் கடத்தல்: சந்தேக நபர் கைது

1 mins read
a6a1760f-d6fe-4e11-b622-026e0200fb29
-

மணிலா: 2011ஆம் ஆண்டில் இஸ்லாமியப் போராளிகளால் கடத்தப்பட்ட அமெரிக்க சுற்றுப்பயணிகள் தப்பிச் செல்லாமல் இருக்க காவல் காத்ததாகச் சந்தேகிக்கப் படும் ஹூட் அப்துல்லாவை (படம்) பிலிப்பீன்ஸ் போலிசார் நேற்று கைது செய்தனர். கடத்தப்பட்டவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்துவ மதகுருவான மார்ட்டின் பர்ன்ஹமும் ஒருவர். பிணைக்கைதிகளைக் காப்பாற்ற பிலிப்பீன்ஸ் ராணுவம் 2002ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எடுத்த முயிற்சி தோல்வியில் முடிய, பர்ன்ஹம் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட அப்துல்லா அபு சாயஃப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.