ஈரானில் விழுந்து நொறுங்கிய விமானம்: 11 பேர் மரணம்

ஈரானில் விழுந்து நொறுங்கிய விமானம்: 11 பேர் மரணம்

1 mins read
eb93cd19-4139-46b5-ad6f-e84f2d526bf7
-

தெஹ்ரான்: துருக்கியைச் சேர்ந்த தனியார் விமானம் ஒன்று ஈரானில் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 11 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்து நேற்று முன்தினம் நிகழ்ந்தது. விமானி உட்பட மாண்டவர் அனைவரும் பெண்கள். அவர்களில் ஒருவர் கர்ப்பமாக இருந்ததாக துருக்கிய ஊடகம் தெரிவித்தது. மாண்டவர்களில் துருக்கியின் பிரபல செல்வந்தர்களில் ஒரு வரான திரு உசேன் பசரானின் மகளான 28 வயது மீனா பசரானும் அடங்குவார். அடுத்த மாதம் நடைபெற இருந்த தமது திருமணத்துக்கு முன்பு குமாரி மீனா பசரான் தமது தோழிகளுடன் துபாய் சென்று கொண்டாடினார். அங்கிருந்து துருக்கி திரும்பும்போது இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார்.

மேற்கு ஈரானில் உள்ள மலைப்பகுதி அருகில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதில் திடீரெனத் தீ மூண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விழுந்து நொறுங்கிய விமா னத்தை ஈரானிய மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர். மாண்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இயந்திரக் கோளாறு காரணமாக தரையிறங்க விமானி அனுமதி கேட்டிருந்ததாக ஈரானிய விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்தது.

சடலங்களை மீட்கும் மீட்புப் பணியைளர்கள். படம்: ஏஎஃப்பி